Categories: சினிமா

தனது மகளுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்ற ராதிகா சரத்குமார்.! ராயன் பகிர்ந்த அழகிய வீடியோ.!

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமார் தனது மகள் ரயானுக்கு இன்று பொங்கல் சீர் கொண்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோவை ரயான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் உலகின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் ராதிகாவும், சரத்குமாரும். 90களில் தங்களது திரைப்பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்றளவும் படங்களில் நடித்துவருகின்றனர்.

தனது மகளுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்ற ராதிகா சரத்குமார்.! ராயன் பகிர்ந்த அழகிய வீடியோ.! 1

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு ராதிகா தனது மகள் ரயானுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரயான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான ராதிகா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். த

ற்போது படங்களிலும், சின்னத்திரையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ராதிகா. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி கேர் ஆஃப் ராணி’ என்கிற நாடகத்தை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார்.

ராதிகாவுக்கு முதலில் நடிகர் பிரதாப் போத்தனுடன் திருமணம் ஆகி விவாகரத்தாகி இருந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதிகாவிற்கு ரயான் என்கிற மகள் இருக்கிறார்.

முதல் இரண்டு திருமணங்களும் கசந்து விட்ட நிலையில் இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா. 2011ம் ஆண்டு ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் மீடியா தயாரித்து வந்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சரத்குமார் இருந்தார். அப்போது இருவருக்கும் காதலில் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதிகளுக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார். சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி வரலட்சுமி மற்றும் பூஜா ன்கிற இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். ரயானுக்கு கிரிக்கெட் வீரர் வருண் என்பவருடன் திருமணமாகி தாரக் மற்றும் ராத்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவ்வப்போது தனது பேரக் குழந்தைகளுடன் வெளிநாடு செல்வது, அவுட்டிங்கிற்கு வெளியில் அழைத்து செல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று அழகிய புகைப்படங்களை ராதிகா பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது மகள் ரயானுக்கு பொங்கலுக்காக சீர் கொண்டு சென்றிருக்கிறார். கரும்பு, வெல்லம், அரசி, மஞ்சள் குலை, கூலைப்பூ, புத்தாடை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சென்ற அவர்கள் தனது மகளுக்கு தட்டில் சீர் வைத்து கொடுக்கின்றனர்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ரயான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்