வைகுந்த ஏகதேசி தினத்தில் காலமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை.! முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ரஜினி.!

ஊடகவியலாளரும் நடிகருமான ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் காலையில் ரஜினிகாந்த்தும், மாலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் நேரில் சென்று அவரது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை செய்தியாளராக பணியாற்றி வந்தவர் ரங்கராஜ் பாண்டே. இவர் அரசியல்வாதிகளை கேள்விகளால் திணறடித்து விடுவார். பல பேட்டிகள் வைரலான நிலையில் இவர் திடீரென ஒரு நாள் தொலைக்காட்சியில் இருந்து விலகி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். தற்போது யூடியூப் சேனலில் அரசியல் குறித்த செய்திகளை பகிர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைகுந்த ஏகதேசி தினத்தில் காலமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை.! முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ரஜினி.! 1

விளம்பரம்

வைகுந்த ஏகதேசி தினத்தில் காலமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை.! முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ரஜினி.! 3

மேலும் இவர் அஜித்தின் மேற்கொண்ட பார்வை, விஜய் சேதுபதியின் க/பெ ரண சிங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான மேற்கொண்டை பார்வை படத்தில் வழக்கறிஞராக இவர் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் அரசியல் பக்கம் தனது பார்வையை திருப்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது தந்தை காலமான செய்தியை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்து இருந்தார். வைகுண்ட ஏகாதசி தினத்தில் தனது தந்தை ஆசார்யான் திருவடியை அடைந்தார் என்றும் அவரது காரியங்கள் இன்று நடைபெற இருக்கின்றது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்

விளம்பரம்
தொடர்புடையவை  "நீங்களாச்சு பிக்பாஸ் ஆச்சு.! ஆள விடுங்க டா.!" திடீரென பிரதீப் ஆண்டனி போட்ட வைரல் பதிவு.!

வைகுந்த ஏகதேசி தினத்தில் காலமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை.! முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ரஜினி.! 5
இந்த செய்தியை அறிந்த நடிகர் சூப்பர் ஸ்டார் நேரடியாக ரங்கராஜ் பாண்டே இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் மாலை ரங்கராஜ் பாண்டேவின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது தந்தையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் டிடிவி தினகரன், ஜி.கே வாசன் போன்ற பல தலைவர்கள் பாண்டேவின் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண, கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Common Man

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment