Categories: சினிமா

கிராமத்து நாயகனாக மிரட்டி எடுத்துள்ள சாந்தனு..! ராவணக்கோட்டம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

வெளியிட்டது

நடிகர் சாந்தனு நடித்துள்ள ராவணக் கோட்டம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். பிரபல இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் மகன் தான் நடிகர் சாந்தனு. 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்காததால் பின்னர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சில படங்களில் நடித்திருந்த போதிலும் அவருக்கு பெரிய அளவில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுதா கொங்காரா இயக்கிய பாவக் கதைகள் என்கிற படத்தில் தங்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தனது நண்பனுக்கு பெண் தன்மை இருந்த போதிலும் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரமாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சாந்தனு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமத்து நாயகனாக மிரட்டி எடுத்துள்ள சாந்தனு..! ராவணக்கோட்டம் படத்தின் ட்ரைலர் வெளியானது..! 1

பின்னர் இவருக்கு மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக இவர் நடித்த படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். அதன் பின்னர் சில வெப் சீரிஸ்க்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவருக்கும் தொகுப்பாளினியாக இருந்த கிகி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில படங்களில் நடித்து வரும் சாந்தனு தற்போது ராவணக்கோட்டம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கயல் ஆனந்தி, பிரபு, சத்யா என் ஜே, தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கண்ணன் ரவி என்பவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த படம் முன்பே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பது தாமதமாகி கொண்டே இருந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் வருகிற மே மாதம் இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நல்ல வரவேற்பு பெற்று வரும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video…!

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்