பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தற்போது அவரது மனைவி பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்திரன் சந்திரசேகரன். இவர் இந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களையும் தயாரித்து இருக்கிறார். தற்போது கைவசம் பாலாஜி முருகதாஸை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அதன் பணிகள் எதுவுமே தொடங்காமலே இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் வைத்து நடந்த அந்த திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் தனது நண்பர்களுக்கு கூட சொல்லாமல் சர்ப்ரைஸாக திருமணத்தை நடத்தி இருந்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்திற்கு பிறகு அந்த மாதத்தில் அதிகம் பேசப்பட்ட பேசப் பொருளாக இருந்தது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து அவுட்டிங் செல்வது, டின்னர் செல்வது என்று அப்போது புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர்.
தற்போது ரவீந்திரன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு அவரது மனைவி புதிய கிப்ட் ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதில் ஆள் உயர ரவீந்திரரின் புகைப்படத்தை அவர் டிஜிட்டல் ஆர்ட் செய்து கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது ரவீந்தர் பகிர்ந்திருக்கிறார்.
உங்கள் உள்ளத்திலிருந்து வரும் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நான் அடிமை, உங்கள் உதட்டில் இருந்து வாழ்த்துக்கள் அனைத்திற்கும் என் புன்னகை. யாராலும் உன்னை போல் காதலிக்க முடியாது, உன்னை போல் யாராலும் என்னுடைய முட்டாள் தனத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.
நாடகத்தனம் போல் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று இதை சொல்ல மாட்டேன், அது பொய்யும் கூட, ஏற்கனவே எனக்கு மகாலட்சுமி என்கிற மிகப்பெரிய பரிசு கிடைத்திருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி தான் பல சர்ப்ரைஸ்கள் கொடுக்கிறது. நான் நிஜமாக உணர்கிறேன், நீங்கள் என்னை அன்பாக உணர வைத்தீர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O