குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் பேட்டி அளித்த ரவிந்தர் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை பற்றி கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் விஜே மகாலட்சுமி. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. பணத்துக்காக தான் தயாரிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் மகாலட்சுமியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மகாலட்சுமி, தானே மாதம் மூன்று லட்சம் வரை சம்பாதிக்கிறேன். தனது தந்தை ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர். எனக்கு காசுக்கு ஒன்றும் குறைவில்லை. நான் மனதை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வந்தனர். தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி சேனல்களில் இருவரையும் அழைத்து பேட்டி எடுத்துத் தள்ளினர். பேட்டியின் போதும் சிலர் இவரை உருவக் கேலி செய்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தம்பதிகள் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கூட இருவரும் திருச்செந்தூர் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் திருமணம் செய்த சில நாட்களில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார் ரவிந்தர். அப்போதே கேள்வி கேட்ட அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில் உச்ச நடிகை ஒருவருக்கு நடந்த திருமணத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் அதன் மூலமாக சம்பாதிக்கும் காசை விடவும், எங்களை வைத்து நிறைய பேர் சம்பாதித்து இருந்தனர் என்று நயன்தாராவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார் ரவிந்தர். உருவை் கேலி செய்தும் பேட்டிகள் எடுத்தும் எங்களை வைத்து நிறைய பேர் சம்பாதிவிட்டார்கள் என்று சிரித்துவிட்டு கூறி ஆளை விடுங்கடா சாமி என்று அங்கிருந்து கிளம்பி சென்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..
YouTube video code embed credits: Sun News