பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடம் பிடித்து வரும் இந்த சீரியலில் தற்போது பாக்யா கல்லூரி சென்று படிக்கத் தொடங்கி இருக்கிறார். இதனால் கதையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ரித்திகா தமிழ் செல்வி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விலகி இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விரைவில் அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி சில வருடங்களில் கணவரை இழந்த கைம்பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார்.
கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்த கதையில் நடித்து அசத்தி வந்தார் ரித்திகா. தற்போது தனது மாமியார் பாக்யாவுக்கு சப்போர்ட்டாக இருந்து வந்த அமிர்தா கதாபாத்திரத்தில் இருந்து ரித்திகா விலகி இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்து இருந்தது. திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டார் என தகவல் வெளியானது. ஆனால் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் பிக்பாஸ் செல்ல இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் question answer செஷன் நடத்தி இருந்தார். அதில் கேட்ட போது நான் விரும்பி இணைந்த சீரியல் இது இதிலிருந்து விலகப்போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் பிக்பாஸ்க்கு செல்ல போகிறாரா? இல்லை குடும்பத்துடன் செட்டில் ஆக போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.