பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அடுத்து யார் கோபியாக நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருக்கிறது. தற்போது அது குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு “ஒரு குடும்பத் தலைவியின் கதை” என்கிற ஒன்லைனுடன் இந்த நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார் என்று ஒரு கூட்டு குடும்பத்தில் இருக்கும் மனைவி வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார், ஆனால் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமல் ஒரு மூலையில் முடங்கி கிடப்பார். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்த நாடகம் ஒளிபரப்பான சில நாட்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்போது தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இதில் பாக்யாவின் கணவராக கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் சதீஷ்குமார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கோபியின் விலகல் முடிவை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இன்னும் சிலரோ நீங்கள் நாடகத்தில் தொடராவிட்டால் நாங்கள் இந்த நாடகத்தை பார்க்கப் போவதில்லை என்றும் பதிவிட்டு வந்தனர். கோபியின் இந்த விலகல் தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கூறப்பட்டாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய் டெலி அவார்ட் நிகழ்ச்சியில் கோபி புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கிற்க்கு கோபியின் பங்கு அளப்பரியதாக இருக்கும் நிலையில், அவர் இந்த விருது வழங்கும் விழாவில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விருது எதுவும் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் கோபி இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த தகவல்கள் அனைத்தும் யூகங்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், கோபி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் ஒரு முட்டாள் ஏமாந்து விட்டேன், இத்தனை நாள் நான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நான் ஒரு முட்டாள் என்பது இப்போதுதான் எனக்கு தெரிந்தது என்று பேசியிருந்தார். விஜய் தொலைக்காட்சியால் புறக்கணிக்கப்பட்டதால் தான் இந்த சீரியலில் இருந்து கோபி வெளியேறி இருக்கிறார் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் கோபி கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் பப்லு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இணையத்தில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது. பப்லு வெள்ளித்திரைகளையிலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர். ஏற்கனவே ராஜராஜேஸ்வரி, வாணி ராணி, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். எனவே அவர் இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.