திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக தினமும் பலர் மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் இருந்து கிளம்பி வந்து இன்று மிகப்பெரிய ஒரு இடத்தை அடைந்திருப்பவர் தான் புகழ். ஆரம்பத்தில் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடி கடுமையாக அலைந்தார். பிறகு வடிவேல் பாலாஜியால் அது இது எது என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தனக்கு கிடைத்த சிறிய சிறிய வேடங்களில் நடித்து கிடைத்த வாய்ப்பு எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்து இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே உள்ளது.

ஆரம்பத்தில் இவருக்கு பெண் வேடங்கள் மட்டுமே கிடைத்தது. அதை பலரும் கிண்டல் செய்து பேசினர். பல இடங்களில் அவரை பெண் வேடம் போடுபவர் தானே நீங்கள்? என்று நக்கலாகவும் கேலியாகவும் பேசி உள்ளனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத புகழ் ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக பங்கெடுத்தார். இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதில் தனது பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் இவர் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இவரை கதாநாயகனாக கொண்டு ஜூ கீப்பர் என்ற படமும் உருவாகி வருகிறது.

புகழும் பென்சி என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்துள்ளது. புகழின் முகத்தை தனது கைகளில் மெஹந்தியாக வரைந்து உள்ளார் பென்சி. இருவரும் சேர்ந்து ஏதாவது ரீல்ஸ் வீடியோ செய்து அதை instagram-ல் வெளியிடுவது வழக்கம். புகழுக்கு இன்று பிறந்தநாள்.இதை முன்னிட்டு அவர் தனது youtube பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வெளியூர் சென்று விட்டு திரும்பிய அவர் தனது தாய் தந்தைக்காக மீதமான இட்லியை கொண்டு ஒரு சூப்பர் டிஷ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video..
YouTube Video Code Embed Credits: Parattai pugazh