மலையாள படம் பிரேமம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி. படம் மலையாள படம் என்றாலும் தமிழகத்திலும் படம் சக்கை போடு போடு சாய் பல்லவி பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அந்த படத்தின் மூலம் மலரே என தமிழ் சினிமா இளைஞர்களை புலம்ப வைத்தவர் நடிகை சாய் பல்லவி. முதலில் இவர் உங்களில் யார் பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் தான் பங்குபெற்றார், பின் தாம் தூம் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.
அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பெரிய ரீச் பெற்றார். பிறகு நடிகை சாய் பல்லவியின் வெற்றிப் பாதையை நாம் முழுவதும் பார்த்து தான் வருகிறோம். தெலுங்கில் ஃபிடா படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டார்.
சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்கள் சாய் பல்லவி திரைப்பயணத்தில் பெரிய வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
அடுத்து சாய் பல்லவி, ராணாவுடன் நடித்துள்ள விராடா பர்வம் என்ற படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாய் பல்லவி கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். எப்போதும் நடனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் இவர் படங்களிலும் சிறப்பாக நடனம் ஆட கூடியவர்.
கடந்த 9ஆம் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடிய இவர், தனது உறவினர் ஒருவரின்திருமண நிகழ்வில் அனைவருடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Video Courtesy – tamil mithran