குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு குட்டி குட்டி விஷயங்களும் செம்ம க்யூட்டாக இருக்கும். இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் Crush என சொல்லிக் கொண்டு குக்குகளும், கோமாளிகளும் அடிக்கும் லூட்டிகள் பார்ப்பதற்கே மிக நன்றாக இருக்கும். புகழ் சீசன் 1ல் ரம்யா பாண்டியனுடனும், 2வது சீசனில் பவித்ரா, தர்ஷா உடன் இணைந்து அடித்த லூட்டி செம்ம காமெடியாக இருக்கும். அதே போலத்தான் அஷ்வினும் சிவாங்கியும். இவர்கள் இருவரும் செய்த ரொமான்ஸ் குத் வித் கோமாளியை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. தற்போது சீசன் 3ல் அதுபோல ஒரு க்யூட் ஜோடிகள் என்றால் அது சுனிதாவும், சந்தோஷும் தான். வீடியோ கீழே உள்ளது.

சுனிதாவுக்கு தாய்மொழி தமிழ் இல்லை. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பூர்வீகமாக கொண்ட இவர் வேலைத்தேடி சென்னை வந்துள்ளார். நடனக் கலைஞரானா இவர் விஜய் டிவியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின் இவரது புகழ் உச்சத்தை அடைந்தது. தமிழ் சரிவர பேசத் தெரியாமல் இவர் செய்யும் காமெடி வேற லெவலில் இருக்கும். இவர் சுனிதா எக்பிரஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி பல லட்சம் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். Youtube Video Code Embed Credits: Cineulagam
தற்போது சந்தோஷும், சுனிதாவும் காதலிக்கிறார்கள் என்று இணையதளங்களில் வதந்தி பரவியது. அது பற்றி சந்தோஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்களுக்கு பாரதி கண்ணம்மா ரோஷ்ணி, சுனிதா இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்ற கேள்விக்கு, சுனிதா எனக்கு ஒரு நல்ல நண்பர் அவரை திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. WATCH THE BELOW VIDEO..