ஷாலினி பிறந்த நாளுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்துள்ள தல.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

அஜித்தின் மனைவி ஷாலினிக்கு இன்று 43வது பிறந்தநாள். அதை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் தல அஜித். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத பெயர் அஜித், இவரும் ஷாலினியும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் அதிகம் கொண்டாடப்படும் தம்பதிகளாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அன்று தொடங்கி இன்று வரை இவர்கள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஷாலினி பிறந்த நாளுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்துள்ள தல.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

மூத்த மகள் அனோஷ்கா, இரண்டாவது மகன் ஆத்விக். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முழுதாக முழுக்க போட்டுவிட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஷாலினி. திருமணம் ஆன பின்னர் அவர் படத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆனந்த நிலையில் அவ்வப்போது இருவரின் புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் கூட தீபாவளியை தனது மனைவி, மனைவியின் அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார் தல அஜித். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

தொடர்புடையவை  'லியோ' படத்திலிருந்து வெளியானது "நான் ரெடி தான் வரவா" வீடியோ பாடல்..! | Naa Ready than Varava Video Song

ஷாலினி

விளம்பரம்

அதற்காக மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற அஜித், அவருக்கு அங்கு சர்ப்ரைஸ் செய்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். மேலும் சோபாவில் அமர்ந்திருக்கும் ஷாலினியின் தோள் மீது கை போட்டு அஜீத் நின்றபடி ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment