“மாமனிதன் படம் பார்த்து அசந்துபோயுள்ள பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்”!! பதிவிட்டுள்ள வைரல் ட்வீட்”!!

வெளியிட்டது

ஆக்ஷன், சண்டை, காதல் என்பதை மட்டுமே வைத்து சுழன்று கொண்டிருக்கும் திரையுலகில் எப்போதும் சில வித்தியாசமான இயக்குனர்களும் இருப்பது வழக்கமே. மற்ற பெரிய இயக்குனர்களை போல இவர்களை மக்கள் கொண்டாட தவறினாலும், இவர்களுடைய படங்களை மக்கள் கை விடுவதில்லை. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக இருப்பவர் மதுரையை சேர்ந்த சீனு ராமசாமி. இவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் என்ற உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

"மாமனிதன் படம் பார்த்து அசந்துபோயுள்ள பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்"!! பதிவிட்டுள்ள வைரல் ட்வீட்"!! 1

அதன் பின் இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, உதயநிதியுடன் கண்ணே கலைமானே என படங்களை இயக்கிய உள்ளார். இதில் குறிப்பாக விஜய் சேதுபதியின் தர்மதுரை மக்களிடமும், விமர்சனகர்களிடமும் மிக பெரிய வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராமசாமி இடம் பொருள் ஏவல் மற்றும் மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன்.  இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அவரே இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார். படம் சென்ற வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குடும்ப பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பாசிட்டிவ் ரிவியூவே கூறிவருகிறன்றனர். நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு, காயத்ரியின் எதார்த்தம், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவனின் மனதை வருடும் இசை, சீனு ராமசாமியின் திரைக்கதை அமைப்பு என அனைத்துமே நன்றாக இருக்க ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

படம் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடத்திலும் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா சீனு ராமசாமியை நேரில் சந்தித்து ஆரத்தழுவி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்பொது அந்த லிஸ்ட்டில் மற்றொரு ஆகா சிறந்த இயக்குனரும் இணைந்துள்ளார். பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்கள் அழைக்கப்படும் ஷங்கர் இந்த படத்தை அண்மையில் பார்த்துள்ளார்.

படத்தின் குறித்த தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வை மாமனிதன் படம் கொடுத்துள்ளது. இயக்குனர் சீனு ராமசாமிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த படத்தை இயக்கியதற்கு தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த படைத்திருக்க நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும், அப்படி ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுளளார்.  இசையிலும் மெஸ்ட்ரோ இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் படத்திற்கு ஜீவனை கொடுத்துள்ளார்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்