பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ஷெரினா.!

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சூப்பர் மாடல் ஷெரினா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் லைவ் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் பல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். கேரளாவை சேர்ந்தவர் ஷெரினா. தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு ஒரு மாலுக்கு சென்றிருந்தபோது, அங்கு ஒரு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் எதார்த்தமாக கலந்து கொண்ட அவர், வெற்றி பெற்றிருந்தார். அன்று தொடங்கி மாடலிங் துறையில் களம் இறங்கி மாடலாக இருந்து வருகிறார். தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் விளம்பரங்களில் மாடலாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த “வினோதயா சித்தம்” என்ற படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ஷெரினா.! 1

இந்த நிலையில் அவருக்கே பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஆரம்பம் முதலிலே அமைதியான போட்டியாளராக இருந்து வந்தார். அதற்கு அவர் முக்கிய காரணமாக சொன்னது, அவருக்கு தமிழ் சரியாக பேச வரவில்லை என்பதுதான். இதனால் அவர் தொடர்ந்து மலையாளத்தில் ஆயிஷா உடனும் மற்றும் ஹவுஸ்மேட்ஸிடம் ஆங்கிலத்திலும் பேசிக் கொண்டிருந்தார். மலையாளத்தில் பேசியதற்காக பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பிக்பாஸ் பலமுறை கண்டித்தும் அவர்கள் மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருந்தனர். இதனால் ஷெரினாவை வெளியேற்றும்போது மலையாளத்தில் எழுதப்பட்ட கார்டை காண்பித்து கமல் கலாய்க்கும் விதமாக அவரை வெளியேற்றி இருந்தார்.

வெளியே சென்ற அவருக்கு அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி பலத்த வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் ஒன்றை போட்டு இருக்கும் ஷெரினா பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் விக்ரமன் ஒரு நேர்மையான மனிதர் அவர் டைட்டில் வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. அவருடன் சேர்த்து அசிம், ஆயிஷா போன்றவர்களும் டைட்டிலை வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக ஷெரினா பேசியிருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்