அர்ச்சனாவை தொடர்ந்து விரைவில் சீரியலை விட்டு விலக உள்ள சித்து.?? என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விரைவில் சித்துவும் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. என் கணவன் என் தோழன் என்ற ஹிந்தி ரீமேக் சீரியல் சிறிது காலத்திற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அந்த சீரியலில் இனிப்பு கடை நடத்தி வரும் கணவனுக்கு மனைவியாக இருக்கும் ஒருவர் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுவார். ஆனால் அந்தப் பெண்ணின் மாமியார் அதற்கு தடையாக இருப்பார். தடைகளை மீறி எவ்வாறு போலீஸ் அதிகாரியாக அவர் ஆகிறார் என்பது குறித்த கதை தான் என் கணவன் என் தோழன். அதை அப்படியே காப்பி அடித்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சரவணன் கதாபாத்திரத்தில் சித்துவும் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர்.

அர்ச்சனாவை தொடர்ந்து விரைவில் சீரியலை விட்டு விலக உள்ள சித்து.?? என்ன காரணம் தெரியுமா? 1

ஆரம்பத்தில் இந்த தொடரில் சந்தியாவாக நடித்துக் கொண்டிருந்தவர் ஆல்யா மானசா. இவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் இந்த தொடரை வீட்டை விலகினார். பின்னர் ரியா விஸ்வநாதன் என்பவர் அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இருந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா இரண்டு நாட்களுக்கு முன்பு விலகியிருந்தார். இதற்கு காரணமாக அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக கூறியிருந்தார். ஏற்கனவே ஆல்யா மானசா விலகலின் போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் பயங்கர அடி வாங்கியது இந்த சீரியல். பின்னர் புதிய சந்தியாவாக ரியா விஸ்வநாதன் மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்தடுத்து விலகல் நடந்து கொண்டே இருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த சீரியலில் இருந்து விரைவில் ஹீரோவான சித்துவும் விலக கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர் வெள்ளித் திரையில் படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதுதான். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை சித்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் புதிய படத்திற்காக அவர் போட்டோ சூட்டுகளை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியலில் தான் அறிமுகமானார். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் தான் பலரும் வருகிறார்கள். ஆனால் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன்பாக சின்னத்திரை நடிக்கிறார்கள். அதுபோல சித்தமும் வெள்ளித்திரை வாய்ப்பு வந்தவுடன் சின்னத்திரை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்