மாஸா? கிளாஸா? தனுஷை மறைமுகமாக தாக்கினாரா சிம்பு? ட்விட்டரில் கடுமையாக மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

வெளியிட்டது

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் புரொடக்சனுக்கு சொந்தமான வேல்ஸ் யூனிவர்சிட்டியில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். கௌதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக சிம்பு இணைந்துள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் பாடல்கள் என அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்க காரணத்தினால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. நேற்று இந்த விழாவில் பேசிய சிம்பு நான் மாஸா இல்ல கிளாசா என்று பஞ்ச் டயலாக் பேசினார். இது மறைமுகமாக தனுசை தாக்கினாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

மாஸா? கிளாஸா? தனுஷை மறைமுகமாக தாக்கினாரா சிம்பு? ட்விட்டரில் கடுமையாக மோதிக்கொள்ளும் ரசிகர்கள் 1

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு வந்த தனுஷ் எது மாஸ் என்று பேசினார். நான்கு பேரை அடிப்பது மாஸ் இல்லை. வயதான காலத்தில் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது தான் மாஸ் என்று பேசினார். இது அப்போதே விஜயை தனுஷ் தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்தது. விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சில நாட்களாக பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், அது குறித்து தான் தனுஷ் பேசியதாக அப்போது ட்விட்டரில் இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். தற்போது மாஸ் பற்றி சிம்பு பேசியுள்ளது தனுஷை தாக்கி இருப்பதாக ட்விட்டரில் மீண்டும் சண்டையை துவக்கி இருக்கின்றனர் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள். நேற்று சிம்பு பேசும்பொழுது நான் மாஸ் கிளாஸ் என்றெல்லாம் எதுவும் பேசவில்லை, படத்தை பார்த்துவிட்டு மக்கள்தான் அது படம் மாசா இல்லையா என்று சொல்ல வேண்டும் என பேசி இருந்தார்.

இதைப் பார்த்த தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் சண்டையை துவக்கி இருக்கின்றனர். பலரும் தனுஷை தான் சிம்பு தாக்கி இருப்பதாக கூறிவரும் நிலையில், பலர் சிம்புவை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியே வாய் மட்டுமே பேசிக்கொண்டு இரு, சிம்பு வளர்ச்சி அடைந்து ஹாலிவுட் படங்கள் வரை நடித்து விட்டார் என்றும் சிம்புவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்