விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடி சிட்டியிடம் சண்டையிட்டதில் மீனாவுக்கு காயம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சென்று வீட்டிற்கு வருகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மீனாவுக்கு அடிபட்டதை கண்டு விஜயா துடித்து போகிறார். மேலும் எப்படி அடிபட்டது என கேட்கவே, அதற்கு மீனா , வண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறுகிறார்.

உடனே வண்டியை பார்த்து ஓட்டமாட்டியா என மீனாவை திட்டுகிறார். மேலும் நானே இன்று சமையல் செய்கிறேன் என சமைக்க செல்கிறார் விஜயா. மீனா மீது விஜயாவுக்கு இருக்கும் அக்கறையை பார்த்து முத்து அதிர்ந்து போகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. விஜயா இதுபோலவே இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION