விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் நாயகனின் தம்பியாக வரும் மனோஜ் திடீரென சாமியாராக மாறுகிறார். அதனை கண்ட அவரின் மனைவி ரோகிணி கடும் அதிர்ச்சியடைகிறார். மேலும் நீ இன்னும் திருந்தவில்லையா, இப்படி முத்துவை நம்பி தானே எலுமிச்சைபழத்தை எடுத்து மாட்டி அடி வாங்குனியே என கேட்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மனோஜ், முத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், இனி யாரையும் நான் நம்பமாட்டேன் என கூறுகிறார். அதற்கு ரோகிணி, என்னையும் நம்ப மாட்டியா என கேட்கிறார். மேலும் மனோஜிடம் அவரின் பிரச்சனை அவரின் பயம் தான் என்கிறார். அதற்கு மனோஜ், இனி நான் ஜோசியர் சொல்வதை தான் கேட்க போகிறேன் என உறுதியாக கூறுகிறார் மனோஜ்.

மேலும் தான் இனி ஜோசியர் கூறும் ஆடையை தான் போடுவேன் எனவும். தான் ஷோரூம் வரமாட்டேன் அதனை நீயே பார்த்துக்கொள் என ரோகிணி கூறுகிறார். அதனை கேட்டு ரோகிணி கடுப்பாகிறார்.
Embed Video Credits : VIJAY TELEVISION