விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது.

தற்போது தொடரில் ரோகிணி மிரட்டுபவரை வைத்து சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பணம் கேட்டு மிரட்டும் அவர், பணம் தராவிட்டால் ரோகிணி வீட்டிற்குள் வந்துவிடுவேன் என கூறுகிறார். மற்றொரு பக்கம் சத்யாவை மாட்டிவிட சிட்டி, ரோகிணியை வைத்துக்கொண்டு, முத்து செல்போனில் வீடியோ எடுக்க திட்டமிட்டு வருகிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் ரசிகர்கள் குழம்பி இருக்கும் இந்த சமயத்தில், புதியதாக நடிகர் குமரன் என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் சீதாவிற்கு பார்க்கும் மாப்பிள்ளையாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.