தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை படம் பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது வேட்டையன் படம். ரஜினி ரசிகர்களை வேட்டையன் படம் அதிக திருப்தி படுத்தி இருக்கிறது.இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில்,240 கோடி ரூபாய் வசூலை பெற்று உள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்து உள்ளது.

தற்போது படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு உணவு வழங்கி உள்ளது வேட்டையன் அணி. இந்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
