“முடிலடா சாமி…..கெட்டப் போட்டு கொல்லும் சிவாங்கி….கிழித்துதள்ளும் நெட்டிசன்கள் “!!

வெளியிட்டது

சின்னத்திரையில் இப்பொது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். சமையல் போட்டியான இதில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கோமாளிகளாக வருகிறவர்கள் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயமாகும். இதில் கோமாளிகளாக வரும் பாலா,புகழ், மணிமேகலை போன்றோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி.

"முடிலடா சாமி.....கெட்டப் போட்டு கொல்லும் சிவாங்கி....கிழித்துதள்ளும் நெட்டிசன்கள் "!! 1

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர்.

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இப்பொது உடல்நலம் சீராக மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். இதன் நடுவில் அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். எப்போதும் சம்கவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சிவாங்கி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் எப்போதும் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு ஒரு வாரம் கோமாளிகள் ஒரு ஒரு கெட்டப்பில் தோன்றி கலக்குவார்கள். அதே அந்த வாரத்தன் சிறப்பான விஷயமாக அமையும். குறிப்பாக சினிமா பிரபலங்களின் மிக பிரபாலான கெட் ஆப் மட்டுமே பயன்படுத்துவார்கள். கடந்த சில வாரங்கள் முன்பு,  கலந்து கொண்டுள்ள குக்குகளை போலவே வேடமிட்டு அசத்தினார்கள். அதில் குறிப்பாக குரேஷி நடிகை ஸ்ருதிகா போலவே வேடமிட்டு அனைவரையும் சிரிப்பு கடலில் ஆழ்த்தினார்.

இவர் இந்த வார கெட்டப்பாக சமந்தா விஜய்யின் “தெறி” படத்தில் புடை அணிந்து வரும் கெட்டப்பை அப்படியே போட்டு கலக்கியுள்ளார். அவர் அந்த கெட்டப்பில் இருக்கும் அவரை சமூகவலைத்தள வாசிகள் மிக பெரிய அளவில் கலாய்த்து வருகிறார்கள். பல்வகையிலான ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸுகள் இப்பொது சோசியல் மீடியாவில் நிரம்பி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்