முடிவுக்கு வரும் சன் டிவியின் மெகா ஹிட் தொடர்.! விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிளைமாக்ஸ்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று தற்போது முடிவடைய இருக்கும் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெடுந்தொடர்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி காலை தொடங்கி இரவு 11 மணி வரை பல்வேறு நாடகங்களை ஒளிபரப்பி வருகிறது. விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல டிவிகள் தொடர்களை ஒளிபரப்பி சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக வந்த போதிலும், சன் தொலைக்காட்சி தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றளவும் ரசிகர்களின் ஆதரவை பெற்று விளங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஒன்று நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல்தான் தற்போது நிறைவடைய இருக்கிறது. இந்த தகவலால் சுந்தரி சீரியலின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

முடிவுக்கு வரும் சன் டிவியின் மெகா ஹிட் தொடர்.! விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிளைமாக்ஸ்.! 1

கடந்த 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வரை சுமார் 800 எபிசோடுகளை நிறைவடைந்து இருக்கிறது இந்த சீரியல். இந்தத் தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது. கன்னட மொழித் தொடரான சுந்தரி என்கிற கதையை மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதே பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. கருப்பு நிறம் கொண்ட சுந்தரி என்கிற கிராமத்து பெண் தனது நிறம், பாரம்பரிய தோற்றத்திற்கு எதிரான கேலி கிண்டல் அவமானங்களுக்கு எதிராக எவ்வாறு போராடுகிறார் என்பது குறித்த கதையாக இது இருந்து வருகிறது. இதில் சுந்தரியாக கேப்ரியல் செல்லஸும், கார்த்திக்காக ஜிஷ்ணுமேனனும், அனுவாக ஸ்ரீ கோபிகா நீலநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த தொடர் மீண்டும் மே 2022 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சுந்தரியை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் கார்த்திக் பின்னர் அனு தன்னை காதலிப்பதை தெரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அணுவை ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் சுந்தரிக்கு மட்டும் இந்த உண்மை தெரிந்து விடுகிறது. தற்போது அனைவருக்கும் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் அனுவுக்கு சுந்தரி தான் கார்த்தியின் மூத்த மனைவி என்கிற ரகசியம் தெரியாமல் இருந்து வருகிறது் விரைவில் அனுவுக்கும் இந்த உண்மை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் சுந்தரியும் ஐஏஎஸ் தேர்வை எழுதி பாஸ் செய்துள்ளதால் விரைவில் அவர் மாவட்ட ஆட்சியராகவும் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் திடீரென இந்த தொடர் நிறைவடைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

கார்த்திக்கின் முதல் மனைவி தான் சுந்தரி என்கிற உண்மை அனுவுக்கு தெரிய வந்தால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு இந்த நாடகத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த சீரியல் உடனே முடிவடைய இருப்பதாக தெரியவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் முடிவடையும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டிஆர்பியில் டாப் 5 இடங்களில் அடிக்கடி இடம் பிடித்து வரும் இந்த சீரியல் தற்போது முடிவடைய இருக்கும் செய்தி சுந்தரி சீரியல் ரசிகர்களையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்