பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான சன் டிவி நடிகை.! வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.!

பல வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமாகி இருக்கும் சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு, அவரது வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் முதலிடம் வகிப்பது சன் டிவி தான். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நெடுந்தொடர்களை வழங்கி இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிக்கிறது சன் டிவி. இந்த டிவியில் பாண்டவர் இல்லம் என்கிற சீரியலில் நடித்து வருபவர் அனு. இந்தத் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு போட்டியாக எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் இருந்தாலும் இந்த தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமும் இருக்க தான் செய்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான சன் டிவி நடிகை.! வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! 1

விளம்பரம்

பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான சன் டிவி நடிகை.! வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! 3

இந்தத் தொடரில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார் அனு. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை அனு. இந்த சீரியலில் வில்லத் தனமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தது தொடராக பெரிய டிவியான சன் டிவியில் காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மெல்ல திறந்தது கதவு சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்ததால் இந்த நாடகத்திலும் அவருக்கு நெகடிவ் ரோலே ஆரம்பத்தில் கிடைத்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  தனது மகள் யுகாவுக்கு முதல் முறையாக உணவு கொடுத்த காயத்ரி - யுவராஜ் தம்பதிகள்.! (வீடியோ)

பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான சன் டிவி நடிகை.! வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! 5

பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான சன் டிவி நடிகை.! வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! 7

விளம்பரம்

தற்போது இவர் நெகட்டிவ் ரோலில் இருந்து மாறி பாஸிட்டிவாக நடித்து வருகிறார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இவர் சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் கர்ப்பமாக இருக்கிறார். சீரியலிலும் இவர் கர்ப்பமாக இருப்பது போலவே காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அனுவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anu 🧚 (@anu_chweety)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment