“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானாகவே வளரும் என நிரூபித்த சூர்யாவின் மகள் தியா!! அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் 10வகுப்பு மதிப்பெண்!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர்.

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானாகவே வளரும் என நிரூபித்த சூர்யாவின் மகள் தியா!! அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் 10வகுப்பு மதிப்பெண்!! 1

தொடர்ந்து ஆறு, வேல், காக்க காக்க, பிதாமகன், உன்னைத்தேடி,ஜில்லுனு ஒரு காதல், கஜினி, சிங்கம், வாரணம் ஆயிரம், கடைசியாக இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்ரம் படம் வரை, தன்னை மட்டமாக பேசிய அனைவர் முன்பும் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறார். நடிப்பிற்காக எப்போதும் பாராட்டப்படும் சூரியா சமூக சேவைகளிலும் முனைப்பு கட்டி வருபவர்.

நீண்ட ஆண்டுகள் முன்பே, அகரம் என்ற பவுண்டேஷனை உருவாக்கி, அதன் மூலம், கல்வி பயில கஷ்டப்பட்டு வரும் ஏழை எளிய குழந்தைகள் பலருக்கும் சொந்த முயற்சியில் கல்வி கொடுத்து வருகிறார். வெளியில் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் பெரிதாக அதனை பிரபல படுத்திக்கொள்ளும் முனைப்பில் அவர் இல்லை. இவருடைய மனைவி ஜோதிகாவும் அந்த செயலை ஒரு போதும் செய்தது இல்லை.

கண்ணிற்கு மறைவாகவே இவர்கள் இருவரும் இந்த நல்ல செயலை செய்து வருகிறார்கள். நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை பார்த்தார்கள் என்பதும் இணையதளங்களில் இருந்து மதிப்பெண்களையும் டவுன்லோட் செய்தார்கள் என்பதும் தெரிந்ததே. கிட்டத்தட்ட இரண்டு வகுப்புகளிலும் 85% மேல் தமிழக அளவில் தேர்ச்சி உள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழைந்தைகள் உள்ளனர்.இதில் தியா இப்பொது 10ஆம் வகுப்பு முடித்துள்ளார். நேற்று வெளியான தேர்வு முடிவில் இவருடைய மதிப்பெண்ணை அறிந்த பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதலே நன்றாக படிக்கும் தியா, பத்தாம் வகுப்பில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழில் 95, ஆங்கிலத்தில் 99 அறிவியலில் 98 மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தன்னுடைய பெற்றோருக்கும், தான் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து சூர்யா-ஜோதிகா குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அசத்திய நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ அதனை அடுத்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, உள்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்