பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டில் ஹைட்ரா கார்பன் அமைக்க கூடாது என பிரதமருக்கு தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோகாா்பன் தொடர்பான ஆய்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விளம்பரம்
பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்! 1
எடப்பாடி பழனிசாமி

இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்திருந்தது.

விளம்பரம்

இந்நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment