விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் முதல் சிங்கிளின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் முதல் சிங்கின் ப்ரோமோ வெளியாகும் என்று படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வாரிசு திரைப்படத்திலிருந்து தளபதி விஜயின் தோற்றங்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. தீபாவளியன்று படத்தின் சில போஸ்டர்கள் வெளியிடப்பட்டு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், வெகு நாட்களுக்குப் பிறகு விஜய் படமும் அஜித் படமும் மோத இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

படம் வெளியாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு முதல் சிங்கிள் ப்ரோமோவை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதனால் காலை முதலே ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் #VarisuFirstSingle என்ற ஹேஷ் டேக்கையும் அவர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். இதனால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது வாரிசு. தற்போது வெளியாகி இருக்கும் முதல் சிங்கிள் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: