ச்சி.! இப்படி தரங்கெட்ட பொண்ணா இருக்கியே.! வெளிய போடி.! சரஸ்வதியை அடித்து துரத்திய கோதை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தற்போது சரஸ்வதியை இப்படி தரங்கெட்ட தனமாக நடந்து கொள்கிறாயே என்று சொல்லி கோதை வீட்டை விட்டு அடித்து துரத்தி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் தொடரில் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி நிரூபிக்க சரஸ்வதி படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ் தான் கோதையின் மருமகனான அர்ஜுனை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்கிற பழியை துடைக்க தற்போது சரஸ்வதியும் நமச்சியும் இணைந்து புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூனும் இளங்கோவனும் பேசிக் கொண்டிருந்ததை நமச்சி கேட்டு விடுகிறார். அர்ஜுனுக்காக தான் பல இடங்களில் நின்றதாகவும் ,ஆனால் தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது பணம் கொடுத்து உதவ முடியாது என்று அர்ஜுன் கூறிவிட்டதால் இளங்கோவன் கோபத்தில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ச்சி.! இப்படி தரங்கெட்ட பொண்ணா இருக்கியே.! வெளிய போடி.! சரஸ்வதியை அடித்து துரத்திய கோதை.! 1

விளம்பரம்

இதனால் இளங்கோவனை தேடி செல்லும் சரஸ்வதி மற்றும் நமச்சி இருவரும் அவரது தாயின் மருத்துவ செலவிற்காக பணத்தை கொடுத்து உதவுகின்றனர். மேலும் அர்ஜுன் பற்றிய உண்மைகளை கோதையிடமும் நடேசனிடமும் வந்து கூறுமாறு அவர்கள் இளங்கோவனை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் இளங்கோவனின் தாயார் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்ததை அர்ஜுன் வீடியோ எடுக்கிறார். பின்னர் கோதை மற்றும் நடேசனை தேடி வரும் சரஸ்வதி நமச்சி இளங்கோவன் அர்ஜுன் பற்றிய உண்மைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென அர்ஜுன் இளங்கோவன் வீட்டில் சரஸ்வதியும் நமச்சியும் அவரது தாயாரின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து கொண்டு இருந்த வீடியோவை எடுத்து போட்டு காண்பித்து இவனை பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளதாக கூறுகிறார். இதை பார்த்ததும் ராகிணி, கோதை மற்றும் அர்ஜுனனின் தாயார் அனைவரும் சரஸ்வதியை பார்த்து கோபத்தில் கற்றுகின்றனர்.

தொடர்புடையவை  நைட் ஆனா வாழைப் பழத்தை திருடி திங்கிறாரு.! அசீம் மீது காமெடியாக வழக்கு தொடுத்த தனம்.!

ச்சி.! இப்படி தரங்கெட்ட பொண்ணா இருக்கியே.! வெளிய போடி.! சரஸ்வதியை அடித்து துரத்திய கோதை.! 3

விளம்பரம்

காசு கொடுத்து பொய் சொல்ல சொல்லி இப்படி ஒருவரை அழைத்து வந்திருக்கிறாயே இந்த அளவிற்கு தரம் கெட்டு போயிருக்கிறாயே என்று சொல்லி சரஸ்வதியை கோபமாக திட்டி அனுப்பி விடுகிறார் கோதை. இதனால் கண்ணீருடன் அந்த இடத்தில் இருந்து சரஸ்வதி மற்றும் நமச்சி ஆகியோர் வெளியேறுகின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. என்ன தவறு செய்தாலும் அர்ஜுன் தப்பித்துக் கொண்டே இருக்கிறானே என்று சொல்லி ரசிகர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment