தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அர்ஜுனனின் மொபைலை திருடி அதில் இருக்கும் தகவல்களை வசு திருடுகிறார். கோதை கொடுத்த ஐடியாவின் படி தற்போது அர்ஜுனனின் மொபைலை திருடி அதில் இருந்த சில முக்கிய தகவல்களை திருடி இருக்கின்றனர். இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜூன் எப்போது மாட்டுவான் என்கிற பரபரப்புடன் கதை நாளுக்கு நாள் நகர்ந்து வருகிறது. ஆனாலும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் எப்போதும் அர்ஜுன் ஜெயிக்கும் படி காட்டப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் தான் கெட்டவன் என்பதை நிரூபிக்க பலரும் போராடுகின்றனர். ஆனால் அவர்களின் அனைத்து போராட்டங்களையும் அர்ஜூன் ஒரு நிமிடத்தில் தவிடு பொடி ஆக்குகிறார். அந்த வகையில் தற்போது ரவுடி முக்கிய விஷயம் ஒன்றை சொல்லப் போவதாகவும் அதன் பின்னர் அர்ஜூன் மாட்டப் போவதாகவும் பலரும் எதிர்பார்த்து காத்திருக்க நிலையில் அதுவும் கைகூடாமல் போனது. இந்த நிலையில் அடுத்த ஐடியாவாக அர்ஜுனனின் மொபைல் போனை வசு தற்போது திருடி இருக்கிறார். மேலும் அவர் மொபைலில் தனது கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து தகவல்களையும் எடுத்திருக்கிறார்.
ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் திட்டம் போடுவதும் அதை செயல்படுத்துவதும் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்களிடம் பினிஷிங் சரியில்லையேப்பா, கடைசியில் சொதப்பி விடுறீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television