அடேங்கப்பா.! எவ்வளவு பெரிய வீடு..தி லெஜெண்ட் சரவணாவின் வீட்டை பாத்து இருக்கீங்களா?

பெரும்பாலும் ஜவுளி மற்றும் நகை விற்பனை செய்யும் கடைகள் திரைத்துறையில் முன்னணி ஹீரோக்கள் அல்லது மாடல்களை வைத்து தங்களது கடைக்கு விளம்பரம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை உடைத்து எறிந்தவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜன்ட் அருள் சரவணன். சென்னையில் ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய சாம்ராஜ்யம் தான் சரவணா ஸ்டோர்ஸ். இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன். இவர் தங்களது கடையின் விளம்பரத்தில் மாடலை அழைக்காமல் தானே நடித்தார். முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோரிடம் ரொமான்ஸ் காட்டி பட்டைய கிளப்பியிருந்தார். இவரது உருவத்தை வைத்து இவரை பலரும் கேலி செய்து வந்த நிலையில், தான் ஒரு படம் நடிப்பதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அருள் சரவணன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அடேங்கப்பா.! எவ்வளவு பெரிய வீடு..தி லெஜெண்ட் சரவணாவின் வீட்டை பாத்து இருக்கீங்களா? 1

விளம்பரம்

தனது கடின உழைப்பாலும், திறமையாலும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை திறமையாக கட்டி காத்து வருகிறார் அருள் சரவணன். இந்த நிலையில் அவருக்கு படத்தில் நடிக்கும் ஆசை ஏற்படவே அவர் தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தை தயாரிக்க யாரும் முன்வராத நிலையில் தானே சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி 150 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்து நடித்து முடித்துள்ளார். படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 12 கோடி வரை வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த கதாநாயகி ஊர்வசி ரவுத்தோலாவிற்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. 1970 ஆம் ஆண்டு ரங்கநாதன் தெருவில் சிறிய பாத்திர கடையை ஆரம்பித்தார் அருள் சரவணனின் தந்தை செல்வரத்தினம். தன்னுடைய கடும் உழைப்பால் இன்று பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ். சூப்பர் சரவணா, தி லெஜெண்ட் சரவணா என்று பல கிளைகளாக உருவெடுத்துள்ளது சரவணா ஸ்டோர்ஸ்.

தொடர்புடையவை  சுந்தரி - பாரதி கண்ணம்மா நடிகைகள் நடித்துள்ள முதல் படம்.! N4 படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.!

அடேங்கப்பா.! எவ்வளவு பெரிய வீடு..தி லெஜெண்ட் சரவணாவின் வீட்டை பாத்து இருக்கீங்களா? 3

விளம்பரம்

 

இந்த நிலையில் அருள் சரவணனின் வீடு பற்றி ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அருள் சரவணனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் அவர் வந்து செல்வதற்கு தங்கள் ஏதுவாக ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை மிகப் பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறார் அருள் சரவணன். அந்த வீட்டை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சில நாட்கள் அனுமதித்து இருக்கிறார் அருள் சரவணன். அந்த வீட்டின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மிகப்பிரம்மாண்மாக கட்டி இருக்கும் அவரின் Home Tour வீடியோவை நீங்களும் காண..watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Karumpuli Views.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment