ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்

தனுஷ் நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது திருச்சிற்றம்பலம். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் அவர்கள் இயக்கியிருக்கிறார். உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவது முறையாக மித்ரன் ஜவகர் உடன் இணைந்து இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த மூன்று படங்களும் பெரிய வெற்றியை கொடுத்திருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. 2015 மாரி படத்திற்கு பின்னர் சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து அனிருத், தனுஷ் உடன் இணைந்து இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளது. முதல் காட்சியை பார்த்துவிட்டு பலரும் படம் நன்றாக இருந்த்தாக கூறினர். ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 1

விளம்பரம்

இந்தப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் டெலிவரி பாயாக தனுஷ் நடித்திருக்கிறார். படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தாய்க்கிழவி என்ற குத்து பாடலும், மேகம் கருக்காதா என்ற மெலடி பாடலும் மக்களின் மனங்களை கவர்ந்த பாடல்கள் ஆகும். கடைசியாக லைப் ஆஃப் பழம் என்ற பாடலும் வெளியாகி இருந்தது. இதுவும் மக்களின் மனங்களை கவர்ந்திருந்தது. கடந்த வாரம் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது, ட்ரைலரை பார்த்த பலரும் யாரடி நீ மோகினி மற்றும் விஐபி போல் இருப்பதால் இந்த படம் பெரிய அளவில் ஹிட்டு அடிக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தொடர்புடையவை  கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற தளபதி விஜய்..! கேப்டன் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கிய தளபதி..!

ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 3 ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 5 ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 7

விளம்பரம்

இந்த நிலையில் படம் என்று வெளியாகி உள்ளது. காலை 8 மணி முதல் காட்சிகள் திரையவருகின்றனர். படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான கமெண்ட்களை கூறி வருகின்றனர் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த பலரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், தனுஷிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் இருக்கும் என்றும் கருத்துக்களை கூறினர். மேலும் நித்தியா மேனன் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒரு தூணாக இருக்கிறார் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களின் ட்விட்டர் கருத்துக்கள் சிலவற்றை பார்ப்போம்.

ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 9 ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 11 ஷோபனா மாதிரி ஒரு நட்பு கிடைக்கணும்! அழ வச்சிடீங்கப்பா.! ட்விட்டரில் வரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ் 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment