நடிகர் சல்மான் கான் தலைக்கு விலை..! மிரட்டல் விடுத்த நபர்கள்..! அதிர்ச்சியில் பாலிவுட்…!

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசைக்கமுடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் சல்மான் கான். கடந்த சில நாட்களாகவே சில கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு மிட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சல்மான் கானுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

நடிகர் சல்மான் கான் தலைக்கு விலை..! மிரட்டல் விடுத்த நபர்கள்..! அதிர்ச்சியில் பாலிவுட்...! 1

விளம்பரம்

மேலும் சில தினங்களுக்கு முன்னாள் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடும் நடத்தி இருந்தனர். இந்நிலையில் சல்மான் கான் தலைக்கு 25 லட்சம் ரூபாய் விலை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான் கான் வேட்டையாடிய மான் ஒன்றினால் தற்போது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையே வந்து இருக்கிறது. அவர் வேட்டையாடிய கருப்பு மான்,பிஷ்னோய் இன மக்களால் வழங்கப்படுவது ஆகும்.

நடிகர் சல்மான் கான் தலைக்கு விலை..! மிரட்டல் விடுத்த நபர்கள்..! அதிர்ச்சியில் பாலிவுட்...! 3

விளம்பரம்

இதனால் அவருக்கு பிஷ்ணோய் குழு மிரட்டல் விடுத்து வருகிறது. தற்போது சல்மான் கான் இந்த பகையை முடித்துக்கொள்ள விரும்பினால் 5கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என அவருக்கு மிரட்டல் மெசேஜ் வந்து உள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் பாபா சித்திக் விட மோசமாக நடக்கும் என தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment