“கிப்ட் கொடுத்த கமலிற்கு கிப்ட் கொடுத்த உதயநிதி”

வெளியிட்டது

விநியோகிஸ்தராக திரைத்துறையில் அறிமுகமாகி குருவி, மன்மதன் அம்பு, ஆதவன் போன்ற படங்களை வெற்றிகரமாக விநியோகிஸ்து பின்னர் நாயகனாக “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அவர் அப்படி எந்த அலட்டலும் இல்லாமல் முதல் படத்தில் சந்தானத்திடம் மொக்கை வாங்குவதும், காமெடியாக நடிப்பதும் என ஜாலி ஹீரோவாக நடித்திருந்தார் அவர்.

"கிப்ட் கொடுத்த கமலிற்கு கிப்ட் கொடுத்த உதயநிதி" 1

பின்னர் தொடர்ந்து மனிதன், சரவணன் இருக்க பயமே, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, பொதுவாக என் மனசு தங்கம், கெத்து என பல படங்களில் நாயகனாக நடித்தார். பின்னர் அரசியல் பணி காரணமாக கொஞ்ச நாள் வெளியாகி இருந்த இவர், இப்பொது மீண்டும் “நெஞ்சுக்கு நீதி” என்ற படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மீண்டும் விநியோகிஸ்தராக களம் இறங்கியுள்ள உதயநிதி பீஸ்ட், டான், நெஞ்சுக்கு நீதி என்ற படங்களை வெளியிட்டுள்ளார். இப்பொது மீண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான “விக்ரம்” படத்தின் உரிமையை வாங்கி தமிழகத்தில் வெளியிட உள்ளார். நாளை வெளியாக உள்ள படத்தை இப்பொது பார்த்துள்ள உதயநிதி, “இவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் மற்றும் மற்ற படக்குழுவிற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவினை போட்டு இருந்தார்.

இப்பொது நடிகர் கமல், அதற்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு சிறந்த ரசிகர் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டர்கள், படத்தை வாழ்த்தியமைக்கு நன்றி” என எழுதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் இப்பொது இன்னுமும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கமலுடன் “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூர்யா என பலர் நடிக்க, அனிருத் இசை அமைத்துள்ளளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “ராஜ் கமல் பிலிம்ஸ்” படத்தை தயாரித்துள்ளது. படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கமல் நடிகர் சூர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உதவி இயக்குனர்கள் என பலருக்கும் பரிசாக வாட்ச், கார், பைக் போன்றவற்றை பரிசளித்து வருகிறார். மற்ற இதர நடிகர்கள், டெக்னிஷியன்கள் என அனைவருக்குமே வெற்றி விழா நடத்தி, கரி மீனுடன் சாப்பாடு போட்டு சிறப்பித்துள்ளார். இந்த செய்திகள் இணையத்தில் மிகவும் வைரல் ஆனது. இந்நிலையில் படத்தின் விநோயோகிஸ்தர் நடிகர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ திரு.உதயநிதி இப்பொது நடிகர் கமலிற்கு பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதற்கு பாராட்டிய கமலை இப்பொது நேரில் சந்தித்து அவருக்கு நினைவு பரிசு ஒன்று அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது உடன் இயக்குனர் அருண்ராஜா காமராஜா, போனி கபூர் இருந்தனர்,

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்