யூடியூப் பிரபலமானது முதல் பல பேர் கன்டன்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் சினிமா விமர்சனத்தை கையில் எடுத்துள்ளனர். அதில் முக்கியமான ஒருவர் ப்ளூ சட்டை சட்டை மாறன். விமர்சனம் கொடுக்கிறேன் என்ற பெயரில் தனிப்பட்ட தாக்குதலில் கூட ஈடுபடுவார். சமீபத்தில் கூட வலிமை பற்றியும், அஜீத் பற்றியும் பேசி வாங்கி கட்டிக் கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக சர்ச்சையில் மாட்டியுள்ள ஒரு கூட்டம் தான் வலைப்பேச்சு.
ஒரு மயிரும் தெரியலன்னா கூட தெரிஞ்ச மாதிரியே சொல்றீங்க பார்த்தியா…. த்தா அதான்டா தாங்க முடியல வெண்ணைகளா 😂😂 @Anthanan_Offl @dearshakthi @jbismi14 😂😂 https://t.co/rf68i6OVqW
— SSS || FANDOM OF AJITH (@FandomOfAK) June 3, 2022
மூன்று பேர் ஒன்றாக கூடி அமர்ந்து ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த கதை இதுதான் என்று யூகத்தின் அடிப்படையில் பேசுவது வழக்கம். அப்படி அவர்கள் விக்ரம் படம் குறித்து படம் வெளியாவதற்கு முன்பு பேசியது பெரும் கேலிக்குள்ளாக்கி உள்ளது.
இதே மாதிரி தான் பீஸ்ட் படத்துல தங்கச்சி சென்டிமெண்ட் நின்னு பேசும்னு சொன்னானுங்க..
கடைசில தங்கச்சி ஏ இல்லையாம் 😂😂 https://t.co/nzYOTCF8N3— Smile_killer 💜 (@veguli_) June 3, 2022
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் மாஸாக வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த மக்களுக்கும் சிறந்த படமாக அமைந்துள்ளது. முதல் நாளே வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படம் போதைப் பொருள் கடத்தல் பற்றியும், அந்த கும்பலை கண்டுபிடிக்கும் ஃபகத் பாசில் பற்றி கதை. ஆனால் இந்த படம் பற்றி வலைப்பேச்சு சொன்ன கதைக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை. விஜய்சேதுபதி தீவிரவாதியாகவும், அவரை ஜெயிலில் அடைத்து வைத்திருப்பதால் அவரைக் அங்கிருந்து தப்பிக்க வைக்க ஃபகத்தும் ஜெயில் உள்ளே சென்றதாகவும் கூறினர்.
விக்ரம் கதை விவாதம் நம்ம வலைபேச்சு நல்லா உருட்டுனீங்க போங்க என்ன என்ன சொல்றான் பாருங்க… pic.twitter.com/IhUKmMSIVo
— Joe Selva (@joe_selva1) June 3, 2022
இந்த திட்டங்களை எல்லாம் தெரிந்துகொண்டு கமலும் உள்ளே சென்று இவர்களின் திட்டங்களை முறியடிக்கிறார் என்றும் கூறினர். தற்போது இந்த வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஒருவர் ஒரு படி மேலே போய் ஒரு ம* தெரியலனா கூட தெரிஞ்ச மாதிரி செல்றீங்க பாருங்கடா என்று கமெண்ட் அடித்துள்ளார். இதனால் வலைப்பேச்சு சேனலையும், பிஸ்மியையும் வறுத்து எடுத்து வறுகின்றனர்.
இயக்குனருக்கே தெரியாத "விக்ரம்" கதை 👇 pic.twitter.com/ivrFxPeEQD
— குருவியார் (@Kuruviyaaroffl) June 3, 2022