Categories: சினிமா

உங்களுக்கு அரசியல் வேணாம்..சினிமாலேயே இருங்க..கமலை மறைமுகமாக விமர்சித்து வானதி போட்ட ட்வீட்..

வெளியிட்டது

கடந்த மாதம் உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது விக்ரம் படம். உலகநாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒரு மாதம் கடந்தும் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் கொடுத்த வெற்றியால் கமல் அனேக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். லோகேஷுக்கு 80 லட்சம் மதிப்பில் கார், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச், படக்குழுவினருக்கு பிரம்மாண்ட கறி விருந்து என அதகளப்படுத்திவிட்டார் கமல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே படத்தை பார்த்துவிட்டு நேரில் வாழ்த்தினார். உலகமெங்கும் இருக்கும் பல திரை பிரபலங்கள் கமலை வாழ்த்தி வருகின்றனர்.

உங்களுக்கு அரசியல் வேணாம்..சினிமாலேயே இருங்க..கமலை மறைமுகமாக விமர்சித்து வானதி போட்ட ட்வீட்.. 1

 

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் கமல். அங்கு பாஜகவின் வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் சுமார் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போய் இருந்தார். இந்த நிலையில் தற்போது வானதி தனது குடும்பத்தோடு சென்று விக்ரம் படத்தை பார்த்துள்ளார். படம் பற்றி ட்வீட் ஒன்றையும் போட்டுள்ளார். அதில், சட்டமன்ற தேர்தலில் உங்களை வெற்றி கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் விக்ரம் படம் பார்த்தேன். தொடர்ந்து எங்களை மகிழ்வித்துக் கொண்டே இருங்கள். உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதற்கு காரணம் கலை பணியால் மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என்று வானதி சொல்லியிருப்பதன் மூலம், உங்களுக்கு அரசியல் செட் ஆகாது. சினிமா தான் செட் ஆகும் என்ற தொனியில் வானதி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வானதியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வானதியை கலாய்த்து வருகின்றனர் கமல் ரசிகர்கள். வானதியை பார்த்து ஜெயித்து விட்டோம் என்ற ஆணவத்தில் பேசாதீர்கள், வெற்றி தோல்வி நிரந்தரமல்ல, அவர் வாங்கிய மொத்த ஓட்டும் கூட்டணி இல்லாமல், காசு கொடுக்காமல் வாங்கியது, ஆனால் உங்களோட வெற்றி அப்படியா? என்று கேட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்