இது என்கவுண்டர் இல்லை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கை..! Vettaiyan படத்தின் டீசர் வெளியாகியது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவே லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கும் நிலையில் , இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகரித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது என்கவுண்டர் இல்லை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கை..! Vettaiyan படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. ரஜினிகாந்த் உடன், மஞ்சு வாரியார், பகத் பாசில், அமிதாப்பச்சன், ரித்திகா சிங் என பலரும் கலந்துகொண்டு உள்ளனர். இன்று சென்னையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டொபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி ஆகி உள்ளது.

இது என்கவுண்டர் இல்லை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கை..! Vettaiyan படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் மிரட்டி எடுத்து உள்ளார். ஜெயிலர் படத்திற்கு பிறகு வெளியான லால் சலாம் சரியாக போகாத நிலையில், தற்போது சூப்பர் ஸ்டாருக்கு இப்படம் வெற்றி படமாக அமையும் என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment