நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர். இப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பலராலும் நடிகை வரலக்ஷ்மி நடிப்பு பாராட்டி பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு வரலக்ஷ்மி முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார் வரலக்ஷ்மி. தமிழில் நாயகி மற்றும் வில்லி என நடித்து அசத்தி உள்ளார். இவர் வில்லியாக நடித்த சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிகோலாய் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.

அண்மையில் இவர்களின் திருமணம் தீவு ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. பல நடிகர்ளும் இவர்களின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். தற்போது இவர்கள் தல தீபாவளியை கொண்டாடி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram