வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சபரி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது தாரை தப்பட்டை தான். அந்தப் படத்தில் செம்ம மாஸாக நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்திருந்தார் வரலட்சுமி. பின்னர் இவர் விக்ரம் வேதா, சண்டக்கோழி பாகம் 2, சர்க்கார், மாரி 2, இரவின் நிழல், காட்டேரி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். இதில் சர்க்கார் படத்தில் அவர் அரசியல்வாதியாக வில்லியாக நடித்த பின்பு அவருக்கு அதிகமாக வில்லி கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிடவே அவர் தெலுங்கு பக்கம் தலைக்காட்ட தொடங்கினார். தற்போது பல தெலுங்கு படங்களில் அவர் நடித்து முடித்திருக்கிறார். கைவசம் சுமார் ஆறு படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும், கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் அவர் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழ், ஜெயா டிவி, ஜீ தமிழ் போன்ற பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார். இது மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் பங்கெடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வேர்ல்ட் ஆஃப் சபரி என்கிற திரைப்படம் தற்போது பணிகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அந்த படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. திரில்லிங் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி உடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராமன், சுனைனா, பேபி கிருத்திகா போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை மகேந்திரா நாத் கொண்ட்லா தயாரிக்க, அணில் கட்ஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ராகுல் ஸ்ரீவத், நானி இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்தப் படத்தின் ஒன் லைனர் குறித்து படக்குழு சபரியின் திரில்லிங்கான உலகத்தை அனுபவியுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களை காப்பாற்றுவதற்கு நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்ற வரிகள் உடன் டீசரை வெளியிட்டு இருக்கிறது. அதில் வரலட்சுமி மகளாக இருப்பவருக்கு நடக்கும் திரில்லிங்கான அனுபவங்களை பரபரப்பாக காட்டி இருக்கிறது. இந்தப் படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அந்த டிரைலரை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Maha Movies