Categories: சினிமா

வீரம் படத்துல வந்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.!

வெளியிட்டது

வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த யுவினா பார்த்தவியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீரம் படத்துல வந்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.! 1

 

ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்து ஹீரோயின் போல் யுவினா மாறி இருக்கும் புகைப்படங்களை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர்.


சின்னத்திரை தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் யுவினா பார்த்தவி.

 

2013 ஆம் ஆண்டு வெளியான இவன் வேற மாதிரி என்கிற படத்தில் குழந்தையாக நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார் யுவினா.


வீரம் படத்தில் இவர் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கும் இவருக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.


தொடர்ந்து மஞ்சப்பை, அரண்மனை, கத்தி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.


பின்னர் இவருக்கு மாசு என்கிற மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் சூர்யாவின் மகளாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் யுவினா.

கடைசியாக தமிழில் விஜய் உடன் சர்க்கார் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.


இது மட்டுமல்லாமல் சில கன்னட படங்களிலும் யுவினா நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது யுவினாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அந்தப் புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி ஹீரோயின் போல மாறியிருக்கிறார் யுவினா. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வீரம் படத்தில் வந்த அந்த குழந்தையா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும் விரைவில் கோலிவுட்டிற்க்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் தங்களது கருத்துக்களை கமெண்ட்களாக தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்