பிரபல இயக்குனரும், நடிகருகமான டிஆரின் மூத்த மகன்தான் சிம்பு. சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பில் ஒரு கலக்கு கலக்கியவர். காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்றால் அது மன்மதன். நடிப்பது, பாடுவது, பாடல் எழுதுவது, இயக்குவது என்று பன்முகத் திறமையாளராக இருக்கிறார் சிம்பு. பிறகு சில காலத்திற்கு ஒரு படம் கூட நடிக்கவில்லை சிம்பு.

அப்படியே படங்கள் நடித்தாலும் பல சோதனைகளை சந்தித்து வந்தார் சிம்பு, வழக்குகள், கோர்ட்டு, கேஸ் என பல இன்னல்களை சந்தித்து வந்தார். மேலும் உடல்நிலையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் உடல் எடை கூடியது. இந்த காரணங்களால் சிம்புவின் திரை வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் அனைத்தையும் உடைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற வெற்றிப்படத்தை கொடுத்து மீண்டும் வெற்றிக் கணக்கை துவக்கினார் சிம்பு. பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறுது காலம் தொகுத்து வழங்கினார். இப்போது மீண்டும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு.

தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து கொரோனா குமார், பத்து தல என கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். வெந்து தணிந்தது காடு இறுதி கட்டத்தை எட்டயுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது. இதனால் இந்த படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என்று சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.