90’ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது சந்திரமுகி தான். 2005ம் ஆண்டு வெளியான இப்படம் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல் ஆகியோர் நடித்து அசத்தியிருப்பார்கள். அந்த படத்தை பார்த்துவிட்டு 90’ஸ் கிட்ஸ்கள் இரவு நேரத்தில் பாத்ரூம் செல்லக் கூட பயந்து நடுங்கிய காலங்களும் உண்டு. இப்போது இந்த படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ்-ம், ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் தற்போது துர்கா, ருத்ரன், அதிகாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லாரன்ஸ் அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆனதால் சந்திரமுகி 2 கைவிடப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த படத்தின் படபிடிப்புகள் துவங்கி உள்ளன என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் பி.வாசுவே இயக்க உள்ளார். Youtube Video Code Embed Credits: Tamil Mithran

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. காமெடி ரோலில் வைகைப் புயல் வடிவேலும் நடக்க உள்ளாராம்.. முதல் பாகம் போன்று அல்லாமல் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..