இந்தியாவில் குறிப்பாக நம்முடைய தென்மாநிலங்களான தமிழகத்திலும், இரண்டு ஆந்திர மாநிலங்களிலும் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாதவை. சினிமாவிலிருந்து நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அரசியல் பேசுவதையோ, குறியீடுகள் வைப்பதற்கோ ஒருபோதும் யோசித்தது இல்லை. அதே பாணியில் இப்போதுள்ள ரஜினி கூட 25ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பேசிவந்தார். ஆனால் இப்பொது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழுநேர அரசியலில் எடுபட முடியவில்லை.இப்போதிருக்கும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய பிடித்தமான நாயகனாகவும், போது வெளியில் வெளிப்படையாக அரசியலை பற்றி மக்களிடம் பேசி வருபவரும் நடிகர் தளபதி விஜய். ஒவ்வொரு படம் அரசியல் பற்றியோ சமூகம் பற்றியோ பேசினால் பிரச்சனை ஆகும் வெளிவரும் போது, ஆனால் இவருடைய படங்கள் வந்தாலே எதோ ஒரு பிரச்சனை தான். ஆனால் அதனையெல்லாம் தாண்டி, இவருடைய படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூலை குவித்து வருகிறது.

நீண்ட காலமாகவே அரசியல் பேசிவரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என ஒரு இயக்கத்தை உருவாக்கி இருந்தார். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பொது தீவிர அரசியலில் ஈடுபட துவங்கி உள்ளது. முன்னர் சட்டமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்த விஜய், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கு நேரடியாக தன்னுடைய ஆதரவை தெவித்தார். மக்கள் சார்பாக போட்டியிட்டவர்கள் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர், அவர்களை நேரில் சந்தித்தும் நடிகர் விஜய் வாழ்த்து கூறினார்.
இவர் பாடங்களில் சின்னத்தாக பேசப்படும் சில அரசியல் காட்சிகளும் வெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்” படத்தில் அனைவரும் விமர்சிக்க தயங்கிய GST குறித்து தைரியமாக பேசினார் விஜய். அதுமட்டுமின்றி கோவில் கட்ட முற்பட்டு, அப்போது ஏற்படும் விபத்தால் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு “நமக்கு கோவில் தேவையில்லை, இங்கு ஹாஸ்பிடல் வேண்டும்” என கூறுவார்.
அப்போது இந்த இரண்டு விஷயங்களும் பயங்கரமாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.காவை சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக படத்தை விமர்சித்தனர். அனைவரையும் மிஞ்சி திரு.ஹெச்.ராஜா அவர்கள் விஜயை “ஜோசப் விஜய்” என பல இடங்களில் பதிவிட்டார்.
இப்பொது மதுரை ஆதீனம் அவர்கள் விஜயை மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பயங்கரமாக விமர்சித்தார். பேசும் பொது அவர், “நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளுக்கு வைக்க வேண்டிய ஒரு பூவை என்னுடைய காதலிக்கு தருகிறேன், என ஒரு வசனம் பேசுவார். அதை குறிப்பிட்ட மதுரை ஆதினம் “எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அந்த சினிமா நடிகர் அப்படி பேசுவார், யாரும் அவருடைய படங்களை பார்க்காதீர்கள்” என ஆவேசமாக பேசியிருந்தார்.
இப்பொது அவருடைய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, “எச்சரிக்கை” என தலைப்பிட்டு பொது இடங்களில் போஸ்டர் அடித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துளளர்கள். மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டிப்பட்டுள்ளது.