தமிழ்நாட்டில் எஸ்ஏ சந்திரசேகரை தெரியாத ஆட்களே இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இயக்குனநராக ஒரு காலத்தில் இருந்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முண்ணனி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விஜயகாந்தை வைத்து 19 படங்களும், மகன் விஜயை வைத்து 9 படங்களும் இயக்கியுள்ளார். 80 வயதை நெருங்கிய போதிலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தற்போது இவருடைய சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக 76 ஆயிரத்து 122 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அந்த படத்தின் தொகையை இன்று வரை சந்திரசேகர் தனக்கு தரவில்லை என்று விளம்பரத்தின் நிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். ஒப்பந்தம் போடப்பட்ட தொகையை அவர் வழங்கவில்லை என்றும், அந்த பணத்தை வாங்கி தர வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் நீதிமன்றம் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் டேபிள், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து சந்திரசேகரின் வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்வதற்காக சில பேர் அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காத சந்திரசேகர்,காவல்துறையின் உதவியை வழங்குமாறு நீதிமன்றத்தை நாடி பதில் மனு செய்துள்ளார். ஏற்கனவே விஜய்க்கும் தந்தை சந்திரசேகருக்கும் சண்டை இருக்கும் சூழ்நிலையில், அவரது தந்தை 76 ஆயிரம் பணத்தை கடனாக வைத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் விஜய் தனது தந்தை சந்திரசேகருக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லையா? என்றும், என்னதான் பிரச்சனை இருந்தாலும் கடனில் தவிக்கும் அப்பாவை விஜய் இவ்வாறு கண்டும் காணாமல் இருக்கிறார் என்று விஜய் மீது விமர்சனங்களும் எழுகிறது. இந்த விவகாரத்தில் விஜய் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.அந்த செய்தியை நீங்களும் காண…Watch the below video..
Youtube Video Code Embed Credits: News Tamil 24×7