புதிய படத்தில் நடித்து வரும் விஜய் போஸ்ட் லீக்!!

புதிய படத்தில் நடித்து வரும் விஜய் போஸ்ட் லீக்!! 1

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-ஆம் படம் ஆகும். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் . இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அவர் கூறும்போது “நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? நண்பனாக வருகிறாரா? என்பது குறித்து முடிவு தெரியவில்லை. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடன காட்சியை அங்கு படமாக்கினர்.

அப்போது விஜய்யின் தோற்றத்தை யாரோ செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். விஜய் லேசான தாடியுடன் உள்ள அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். படம் அடுத்த வருடம் கோடையில் திரைக்கு வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment