ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.! அப்பாவுக்காக கெஞ்சிய விஜய் மகன் சஞ்சய்

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தனது தந்தை மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். இருந்த போதிலும் தனது நடிப்புத் திறமையாலும், அயராத உழைப்பாலும் இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் விஜய். இவர் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படம் தோல்வியடைந்தது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நெல்சனுக்கு மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளினர். இதனால் தனது அடுத்தப் படத்தை மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமானர். இந்த படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.! அப்பாவுக்காக கெஞ்சிய விஜய் மகன் சஞ்சய் 1

விளம்பரம்

இந்த படத்தின் படபிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து அடிக்கடி விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்று வருகிறார் விஜய். இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்து வரும் நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து காட்சிகள் வெளியாகி வந்தது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த சண்டைக்காட்சிகள் முதலில் வெளியாகியது. பின்னர் ஹோட்டல் ஒன்றில் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகள் என்று தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சரத்குமாரை மருத்துவமனையில் அனுமதிப்பது போலவும், அருகில் டாக்டர் வேடத்தில் பிரபுவும், சரத்குமாரை அழைத்துக் கொண்டு தளபதி ஓடி வருவது போலவும் மொபைலில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.

தொடர்புடையவை  ரோஜாவின் 51வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடிய மகன் மற்றும் கணவர்.!

ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.! அப்பாவுக்காக கெஞ்சிய விஜய் மகன் சஞ்சய் 3

விளம்பரம்

இதனால் கடுப்பான இயக்குனர் வம்சி படபிடிப்பு தளத்திற்கு யாரும் போன் எடுத்து வரக்கூடாது என்று கடுமையான தடை விதித்தார். அப்படி இருந்தும் இன்று மீண்டும் ராஷ்மிகாவுடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இதைபார்த்து மனம் வருந்திய விஜய் மகன் சஞ்சய் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் லீக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.! அப்பாவுக்காக கெஞ்சிய விஜய் மகன் சஞ்சய் 5

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment