எப்படி இருந்த மனுஷன், அவர போட்டு இந்த பாடு படுத்துறீங்க, பாக்கும் போதே கண்ணெல்லாம் கலங்குது..

வெளியிட்டது

தமிழக அரசியலில் மக்களை கவர்ந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகாந்த். ஒரு நடிகராக இருந்து அரசியல் துறைக்கு வந்து அதில் வெற்றி பெற்றும் காட்டியவர் விஜயகாந்த். ரஜினி கமல் என்று இரு துருவங்கள் இருந்தபோதே தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி காட்டியவர். பின்னர் 2005 ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்த அந்த வருடமே ஜெயித்து சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் அடுத்து வந்த தேர்தலில் 29 எம்எல்ஏக்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஒருநாள் பால் கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையில் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்டு, அவரிடம் சண்டையிட்டார். அப்போது நாக்கை துருத்தி காட்டியதாலும், கையை நீட்டி பேசியதாலும் சண்டை பெருசானது. அவருடைய தேமுதிக எம்எல்ஏக்களை தொடர்ந்து அதிமுக தன் பக்கம் இழுத்து விஜயகாந்தை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கத் தொடங்கியது. தகுதி இல்லாதவருக்கு கிடைத்த எதிர்கட்சித் தலைவர் பதவி என்றும், தேமுதிவிற்கு இனி இறங்கு முகம் மட்டும்தான் என்றும் கோபமாக பேசினார் ஜெயலலிதா.

எப்படி இருந்த மனுஷன், அவர போட்டு இந்த பாடு படுத்துறீங்க, பாக்கும் போதே கண்ணெல்லாம் கலங்குது.. 1

பின்னர் வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்ததால் அவர் மனம் உடைந்து போனார். தொடர் தோல்வி அவரை முடக்கியது. அவரால் முன்பு போல் சரளமாக பேச முடியவில்லை. அவருக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை இருப்பதால் அதற்காக வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதாக அவரது மனைவி பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறி வந்தார். அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவம் பார்த்து வந்த போதிலும் அவரால் தற்போது வரை சரியாக பேச முடியவில்லை. உடல் இளைத்து ஆளே மாறி விட்டார். சிங்கம் போல் இருந்த மனிதர், ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கிய மனிதர் இப்படியாகி விட்டாரே என்று அவரைப் அவரின் புகைப்படத்தை பார்த்தவர்கள் கூட கண்கலங்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. இந்த நிலையில் நேற்று அவர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தனது கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுவதற்காக வந்தார். அவரை வேனின் மேல் ஒரு சேர் போட்டு அமர வைத்துவிட்டு, பின்னால் அவரது மனைவி பிரேமலதா நின்று கொண்டிருந்தார்.

அப்போது விஜயகாந்த் அவர்களால் சுத்தமாக உட்காரக்கூட முடியவில்லை. இருந்தபோதிலும் தனது தொண்டர்களை பார்த்து அவர் கையை உயர்த்தி காட்டினார். அப்பொழுது தொண்டர்கள் அவரைப் பார்த்து மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் கொடியேற்றுவதற்காக கயிறை அவரிடம் கொடுக்கின்றனர் ஆனால் அவருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பின்னர் அவருக்கு கண்ணாடியை மாட்டி விடுவதற்கும், தேசிய கொடிக்கு வணக்கம் வைப்பதற்கும் கீழிருந்து ஒரு கை அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் விஜயகாந்தின் மனைவியும் அவரை கையை இப்படி வையுங்கள் அப்படி வையுங்கள் என்று கைகளை பிடித்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள், கட்சி என்ற பெயரில் அவரை பாடாய் படுத்தாதீர்கள் என்று பிரேமலதாவிற்கு தங்களை அறிவுரைகளை கூறி வருகின்றனர். அந்த வீடியோவை பார்க்கும் நமக்கும் ஒரு கணம் மனம் கலங்கித் தான் போகிறது. சிங்கம் போல் இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே, அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்று நாமும் இறைவனை பிரார்த்திப்போம். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

YouTube Video Code Embed Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்