குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் புகழ். சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் வந்து தனது கடின உழைப்பால் இன்று முன்னேறி உள்ளார். இவர் சினிமா வாழ்க்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது காமெடி திறமையால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார் புகழ். சிறு சிறு வேடத்தில் படங்களில் நடித்து வந்த புகழ் தற்போது, கதாநாயகனாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜூ கீப்பர் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் வில்லனாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் வில்லனாக நடித்த கோலிசோடா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்போது புகழ் தனது மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இவரின் மகளுக்கு ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் புகழின் மகள் அப்பா போலவே இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.