Categories: சினிமா

KGFக்கு டஃப் கொடுக்கும் விக்ரம் | ஒரு தமிழ் படம் Pan India படத்துக்கே டஃப் கொடுத்து இருக்கு

வெளியிட்டது

2019ம் ஆண்டில் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் கமல். இதனால் பெரும் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது விக்ரம் படம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கே படம் வெளியானது. இரவு முதலே கமல் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் காட்சிகள் முடிந்து வெளியே வந்த அனைவரும் படம் வேற லெவலில் இருந்ததாக சொன்னார்கள்.

KGFக்கு டஃப் கொடுக்கும் விக்ரம் | ஒரு தமிழ் படம் Pan India படத்துக்கே டஃப் கொடுத்து இருக்கு 1

படத்தில் 67 வயது இளைஞராக வாழ்ந்துள்ளார் கமல், அவரின் கன்னங்கள், கண்கள் கூட நடித்து இருந்ததாக அவரது ரசிகர்கள் சிலாகித்து கூறியிருந்தனர். குறிப்பாக துப்பாக்கியை வைத்து சுடும் காட்சிகளில் புல்லரிக்க வைத்து இருக்கிறார் ஆண்டவர். முதல் பாதி முழுவதும் கமலின் பங்கு குறைவாக இருந்தது சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் இரண்டாவது பாதியில் கலைஞானி, உலகநாயகன் என்ற தனது அடைமொழிகளை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கமலஹாசன் என்று சொன்னால் அது மிகையில்லை.

கமல்ஹாசன்தான் காளிதாஸின் வளர்ப்பு தந்தை. போதைப் பொருள் விஷயத்தில் காளிதாஸை மர்ம கும்பல் கொன்று விடுகின்றனர். அதன் பின்னர் கமலையும் கொன்றுவிடுவதாக காட்டப்படுகிறது. கமலையும், காளிதாசையும் யார் கொன்றார்கள் என்ற விசாரணை நடத்தும் அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். முதல் பாதி முழுவதும் இவரின் விசாரணை காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஃபகத் பாசலின் மனைவியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். தனது கண்களாலேயே மிரட்டியுள்ளார் ஃபகத் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.


அடுத்தபடியாக விஜய்சேதுபதி கஞ்சா வியாபாரியாக சந்தானம் என்ற கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். சட்டை இல்லாமல் என்டரி கொடுக்கும் ஓப்பனிங் காட்சி சும்மா கைத தட்டல்களால் அதிர்கிறது. ஷிவானி, மைனா, மகேஸ்வரி என மூன்று மனைவிகள் வில்லனுக்கு. இவர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சோட்டா பீமிற்கு லட்டு சாப்பிட்டால் சக்தி வருவது போல இவருக்கு கஞ்சா சாப்பிட்டால் சக்தி வரும். முன்பு விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களையும் விஞ்சி நிற்கிறது சந்தானம் கதாபாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். முகமூடி அணிந்து கொண்டு கொல்லும் அந்த கோஸ்ட் கேங்கை கண்டுப்பிடிக்கும் பணியில் இருக்கும் ஃபகத் பாசிலுக்கு இன்டர்வல் சமயத்தில் செம்ம ட்விஸ்ட் கொடுத்துள்ளார் இயக்குனர். இந்த இடத்தில் goosebumps வராத ஆட்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு கதையை கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் என்று சொன்னால் அதை மறுப்பதற்க்கு இல்லை.

மகனை கொன்ற கும்பலை பழிவாங்கதான் கமல் வந்துள்ளார என்று நினைத்து படம் பார்ப்பவர்களுக்கு செம்ம ட்விஸ்ட் கொடுத்துள்ளார் இயக்குனர். இறுதியில் சூர்யாவின் என்ட்ரயின் போது கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்து போகிறது. சூர்யாவின் நடிப்பை கொண்டாடாத ஆட்களே இருக்க முடியாது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குனர். கைதி படம் பார்க்காதவர்களுக்கு இந்த படம் புரியாது என்று சிலர் கூறி வருகின்றனர். எது எப்படியோ உலகநாயகன் திரையில் தோன்றி செய்யும் ஆக்‌ஷன் சண்டை காட்சிகள், ஃபகத் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பு, சூர்யாவின் சிறப்பு தோற்றம் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது விக்ரம். படம் குறித்து கமல் ரசிகர்கள் பேசும் போது KGF என்ன சார் KGF விக்ரம் வந்து பாருங்க..KGF எல்லாம் தூக்கி சாப்பிட்ருச்சு என்ன கூறினர். அடுத்தபடியாக கைதி 2 மற்றும் விக்ரம் 3யை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் கமல் ரசிகர்கள்..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்