Categories: சினிமா

ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக் டீசர் வெளியானது.!

வெளியிட்டது

தற்போது உருவாகும் படங்கள் எல்லாமே பான் இந்தியா படங்கள் என்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகி வருகிறது. ஆனால் சில படங்களை மற்ற மொழிகளில் அப்படியே மறு உருவாக்கமும் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் படங்களை அந்த அந்த மொழிகளில் இருக்கும் முண்ணனி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கி, ஓய் நாட் ஸ்டியோஸ் சஷிகாந்த் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் விக்ரம் வேதா. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி அடைந்தையடுத்து இந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இருவரும் விரும்பினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் ஹிந்தி ரீமேக் டீசர் வெளியானது.! 1

இந்த படத்தில் மாதவன் கதாபாத்திரமான விக்ரமில் சயிப் அலிகானும், விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனும் நடிக்க ஒப்பந்தம. ஆகினர். மேலும் இவர்களுடன் ராதிகா ஆப்தே, ரோஹித் சரவும் நடிக்கின்றனர். இந்த படத்தை தமிழில் ஒளிப்பதிவு செய்த பி.எஸ் வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியிலும் இந்த படத்திற்கு விக்ரம் வேதா என்றே அழைக்கப்படுகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்த ஒய் நாட் ஸ்டியோஸுடன் இணைந்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

சமீபத்தில் ரித்திக் ரோசனின் 48வது வயதை முன்னிட்டு வேதா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. பிப்ரவரி 24ல் விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: T-Series

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்