அட பிக்பாஸ் விக்ரமனா இது? விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து இருக்கும் விக்ரமன்.! இதோ வீடியோ

பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டுள்ள விக்ரமன் ஏற்கனவே விஜய் டிவியில் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார். அந்த நாடகத்தின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலமே ஆன நிலையில் பல சண்டைகளும், அடிதடிகளும் நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 21 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறது பிக்பாஸ். மேலும் ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் பார்க்கும் வகையிலும் நேரடி ஒளிபரப்பையும் செய்து வருகிறது. கடந்த ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே இந்த முறையும் கமலஹாசனே பிக்பாஸை தொகுத்து வழங்கி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

அட பிக்பாஸ் விக்ரமனா இது? விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து இருக்கும் விக்ரமன்.! இதோ வீடியோ 1

விளம்பரம்

பிக்பாஸ் ஐ பொறுத்தவரை, அந்த நிகழ்ச்சி மீது எப்போதும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொண்டே இருக்கும். அது என்னவென்றால் விஜய் டிவியை சேர்ந்தவர்களுக்கே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் வைத்துக் கொண்டிருப்பர். அதேபோல் விஜய் டிவியை சேர்ந்த பலரையும் களமிறக்கிய பிக் பாஸ் சீசன் 4 மற்றும் 5 சரிவை கண்டது. விஜய் டிவியை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பு கொடுத்ததால் அந்த இரண்டு சீசன்களுமே பெரிய அளவில் வெற்றி பெற இயலவில்லை. எனவே இந்த முறை வித்தியாசமான போட்டியாளர்களை களம் இறக்க திட்டமிட்டது பிக்பாஸ் குழு. அதில் ஒருவர் தான் விக்ரமன். இவர் அரசியல் தளத்தைச் சார்ந்தவர்.

தொடர்புடையவை  திடீர் உடல்நலக் குறைவு.! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ADK

அட பிக்பாஸ் விக்ரமனா இது? விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து இருக்கும் விக்ரமன்.! இதோ வீடியோ 3

விளம்பரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக இருக்கிறார். முதல் முறையாக ஒரு அரசியல்வாதியை பிக்பாஸ் களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் விஜய் டிவியில் 2016 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ஒரு சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் சரத்குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. காதலை மையமாகக் கொண்டு இந்த நாடகம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடி வாங்கியதால், இந்த சீரியலை 29 எபிசோடுகளிலேயே நிறுத்திவிட்டனர். இதன் பின்னர் விக்ரமன் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், பின்னர் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.

அட பிக்பாஸ் விக்ரமனா இது? விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து இருக்கும் விக்ரமன்.! இதோ வீடியோ 5

விளம்பரம்

தற்போது விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இவர் தேவையில்லாத ஆணி என்று பலரும் இவரை வெறுத்து வருகின்றனர். மேலும் இவர் பேசுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தனர். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பாரா அல்லது வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனக்கு இது வித்தியாசமான தளம் என்று தொடர்ந்து விக்ரமன் கூறிவந்த நிலையில் கடைசியில் விக்ரமனும் விஜய் டிவியின் ஒரு ப்ராடக்ட் தான் என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடையவை  படிக்காதவன் என்று சொல்லி பிரிந்து சென்ற மனைவி, கண்ணீர் விட்டு கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment