விடுதலை படத்தின் காட்டுமல்லி பாடலை இளையராஜா போல அப்படியே பாடி காட்டிய விக்ரமன்..!

பிக்பாஸில் கலந்துகொண்டு பல உள்ளங்களை வென்ற விக்ரமன் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி என்கிற பாடலுக்கு அவர் பாடிக்கொண்டே செம் Vibe செய்து கொண்டிருக்கிறார். பலரும் அந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குற்றம் நடந்தது என்ன என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் விக்ரமன். பின்னர் தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றிய அரசியல் செய்தியாளராகவும் இருந்து வந்தார். இதற்கு முன்பாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை மற்றும் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் நாடகங்களை முற்றிலும் கைவிட்டு அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை படத்தின் காட்டுமல்லி பாடலை இளையராஜா போல அப்படியே பாடி காட்டிய விக்ரமன்..! 1
தமிழகத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில செய்தி தொடர்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது. வட இந்திய ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசி எதிரில் இருப்பவர்களை நிலை நடுங்க செய்து விடுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் விக்ரமன். இந்த நிலையில் விக்ரமனுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல்வாதி ஒருவரை முதன்முறையாக பிக்பாஸில் களம் இறக்கி இருந்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்திருந்தது. வெளியே வந்த பின்னர் அவர் தன்னுடன் மோதிய அசீம் குறித்து தொடர்ந்து பேட்டிகளில் விமர்சனங்ளை கூறி வந்தார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் ஓய்ந்து அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விக்ரமன் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக காணப்படுகிறார். ஏதாவது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மனோஜை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாமல் பணத்தை திருப்பி கொடுத்த ரோகினி..! அதிர்ச்சியாகிய விஜயா மற்றும் மனோஜ்..!

விடுதலை படத்தின் காட்டுமல்லி பாடலை இளையராஜா போல அப்படியே பாடி காட்டிய விக்ரமன்..! 3

அந்த வகையில் தற்போது விடுதலைப் படத்திலிருந்து வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காட்டு மல்லி பாடலை பாடி வைப் செய்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் நல்ல ஒரு இசையில் இந்த பாட்டு வந்திருப்பதாக கூறி அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment