குக் வித் கோமாளி பிரபலம் ரக்ஷன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படங்களை கலக்கப்போவது யாரு தீனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருபவர் வி.ஜே ரக்ஷன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. கோமாளிகளுடன் இணைந்து இவர் அடிக்கும் லூட்டியையும் ரசிக்க பெரிய கூட்டமே இருக்கிறது. இதில் கிடைத்த புகழால் இவருக்கு 2019 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.